Aug 13, 2026
Thisaigal NewsYouTube
மாணவர், தந்தை மீது தாக்குதல்: கல்வி இலாகா நடவடிக்கை!
தற்போதைய செய்திகள்

மாணவர், தந்தை மீது தாக்குதல்: கல்வி இலாகா நடவடிக்கை!

Share:

ஷா ஆலம் - செரி கம்பாங்கனில் உள்ள இடைநிலைப் பள்ளிக்கு அருகில் மாணவரும் அவரது தந்தையும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிலாங்கூர் மாநில கல்வி இலாகா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக வன்முறை போன்ற எந்தவொரு முறைகேட்டையும் ஒருபோதும் சகித்துக்கொள்ளப் போவதில்லை என்றும் இலாகா வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பொதுமக்கள் யூகங்களைப் பரப்ப வேண்டாம் என்றும், சிறுவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும் அது எச்சரித்துள்ளது.

முன்னதாக, ஜூலை 3ஆம் தேதியன்று மதிய வேளையில் 16 வயது மாணவரும் அவரது தந்தையும் வழிமறித்துத் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகம்மது ஃபாரிட் அஹ்மத் விசாரணைக்காகச் சிலரைத் கைது செய்துள்ளதை உறுதிப்படுத்தியிருந்தார்.

Related News

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது