கோலாலம்பூர், செப்டம்பர்.12-
இந்தோனேசியாவின் பாலியில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 19-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதற்கு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இப்படி ஒரு துயரமான சூழ்நிலையில், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோவுடனும், அந்நாட்டு மக்களுடனும் மலேசியா தொடர்ந்து துணை நிற்கும் என்றும், இப்பேரழிவிலிருந்து இந்தோனேசியா மீண்டு வர மலேசியா பிரார்த்தனை செய்யும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.








