Sep 26, 2026
Thisaigal NewsYouTube
குவா முசாங் - கோலா லிப்பிஸ் சாலையில் டிரெய்லர் விபத்து:  5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரமைப்பு
தற்போதைய செய்திகள்

குவா முசாங் - கோலா லிப்பிஸ் சாலையில் டிரெய்லர் விபத்து: 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரமைப்பு

Share:

குவா மூசாங், மே.03-

Kuala Lipisஸிலிருந்து குவா மூசாங் நோக்கிச் சென்ற டிரெய்லர் ஒன்று, இன்று அதிகாலை 2.10 மணியளவில் வளைவான மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மழையினால் சாலை வழுக்கியதுடன் டிரெய்லரின் அதிகப்படியான சுமையும் இந்த விபத்திற்குக் காரணமாகக் கருதப்படும் நிலையில், இதன் காரணமாக இரு திசைகளிலும் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக குவா மூசாங் மாவட்டக் காவற்படைத் தலைவர் Superintendan Sik Choon Foo தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவற்படையினர், கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் சுமார் 5 மணி நேரம் போராடி காலை 7 மணியளவில் டிரெய்லரை அப்புறப்படுத்தினர்; காயமடைந்த ஓட்டுநரும் உதவியாளரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

Related News