Jun 29, 2026
Thisaigal NewsYouTube
அஸாம் பாக்கியின் பங்கு விவகாரம்: விவாத மனுவை நிராகரித்தார் சபாநாயகர் ஜொஹாரி அப்துல்
தற்போதைய செய்திகள்

அஸாம் பாக்கியின் பங்கு விவகாரம்: விவாத மனுவை நிராகரித்தார் சபாநாயகர் ஜொஹாரி அப்துல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.23-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி, பொதுப் பங்கு நிறுவனங்களில் பங்குகளைக் கொண்டிருந்தது தொடர்பான விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் நிராகரித்துள்ளார்.

புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங், கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி இது தொடர்பான அவசர விவாத மனுவைச் சமர்ப்பித்திருந்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் இது குறித்து விளக்கமளித்த சபாநாயகர் ஜொஹாரி அப்துல், இந்த விவகாரத்தை விசாரிக்க அரசாங்கம் ஏற்கனவே ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளதைச் சுட்டிக் காட்டினார்.

விசாரணை தற்போது நடைபெற்று வருவதால், அந்த விசாரணையில் எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், அக்குழு தனது பணியில் முழு கவனம் செலுத்துவதற்காகவும் இந்த விவாத மனுவை தாம் நிராகரிப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு