பத்து பஹாட், ஜனவரி.10-
இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மாது ஒருவர் உயிரிழந்ததுடன் அவரின் கணவர் கடும் காயங்களுக்கு ஆளாகினார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.45 மணியளவில் ஜோகூர், ஜாலான் லாபிஸ் – யொங் பெங் சாலையின் 14 ஆவது மையில் நிகழ்ந்தது.
Proton Saga கார், Toyota Yaris ரக காருடன் மோதிக் கொண்ட இந்த விபத்தில் புரோட்டோன் சகா காரில் பயணித்த 57 வயது மாது உயிரிழந்தார். அவரின் 64 வயது கணவர் கடும் காயங்களுக்கு ஆளானதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருலானுவார் முஷாடாட் தெரிவித்தார்.
அந்த தம்பதியர் சிகமாட்டிலிருந்து யொங் பெங் சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.








