Mar 12, 2026
Thisaigal NewsYouTube
10 லட்சம் பயணிகள் மைல் கல்லைக் கொண்டாடியது மைல் ஏர்லைன்
தற்போதைய செய்திகள்

10 லட்சம் பயணிகள் மைல் கல்லைக் கொண்டாடியது மைல் ஏர்லைன்

Share:

மலேசிய விமானத்துறையில் குறுகிய காலத்திலேயே முன்னணி விமான நிறுவனமாக மாறி வரும் சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன், பத்து லட்சம் பயணிகள் தனது விமானங்களில் பறந்து விட்டனர் என்பதற்கு அடையாளமாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கே.எல்.ஐ.ஏ 2 இல் தனது பத்து லட்சம் பயணிகள் கொண்டாட்ட விழாவை சிறப்பாக நடத்தியது.
அந்த பத்தாவது லட்சத்து பயணி யார்? அந்த அதிர்ஷ்டசாலிக்கு என்ன பரிசு காத்​திருக்கிறது என்று பெரிய எதிர்பார்ப்பு காத்திருந்த வேளையில் சரவா கூச்சிங்கிலிருந்து கே.எல்.ஐ.ஏ 2 ஐ நோக்கி பிற்பகல் 3.00 மணியளவில் வந்தடைந்த மைஏர்லைன்னின் Z98104 விமானத்தின் 180 பயணிகளும் ஆச்சரியத்தன் வரவேற்கப்பட்டர். ஒரு பயணி என்ற நிலையில்லாமல் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் பயணப் பெட்டியை எடுக்கும் இடத்தில் பிரிமியம் வவுச்சர்கள் உட்பட பல இலவச, மதிப்பு வாய்ந்த பொருட்கள் அன்பளிப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தேதி கோலாலம்பூரை தளமாக கொண்டு தனது சேவையை தொடங்கிய மைஏர்லைன் மலேசியா​வில் ஒன்பது வழித்தடங்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பயணிகளுக்கு சேவையை வழங்கியுள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!