Oct 10, 2026
Thisaigal NewsYouTube

தேசிய பயிற்சி வாரம், ஆசியான் மக்களுக்கும் திறக்கப்படுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தேசிய பயிற்சி வாரம், ஆசியான் மக்களுக்கும் திறக்கப்படுகிறது

கோலாலம்பூர், ஜூன்.10-

ஆசியான் தலைமையின் கீழ் ஒரு மைல் கல் நடவடிக்கையாக, மலேசியா தனது முதன்மையான தேசிய பயிற்சி வாரத்தை முதல் முறையாக அனைத்து ஆசியான் மக்களுக்கும் திறக்கவிருக்கிறது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்துள்ளார்.

இது நாடு முழுவதும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச பயிற்சி வாய்ப்புகளை வரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ஆன்லைனில் வழங்குவிருக்கிறது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் மனித மூலதன மேம்பாட்டு முதலீட்டு கருத்தரங்கின் பேசிய ஸ்டீவன் சிம், தேசிய பயிற்சி வாரம் என்பது ஆசியான் திறன் ஆண்டு என்ற கருப்பொருளில் மலேசியா தலைமையின் கீழ் ஒரு முக்கியப் பயிற்சியாகும். இது பிராந்திய தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கான ஒரு வருட கால உறுதிப்பாடாகும் என்று ஸ்டீவன் சிம் விவரித்தார்.

இந்த ஆண்டு தேசிய பயிற்சி வாரம், ஆசியானில் மிகப் பெரிய மாற்றத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த பயிற்சியானது AI, டிஜிட்டல் மாற்றம், பசுமை தொழில்நுட்பங்கள், தலைமைத்துவம் மற்றும் மென்திறன்கள் ஆகியவற்றின் படிப்புகளுக்கான இலவச அணுகலாக அமைந்து இருக்கும் என்று ஸ்டீவன் சிம் விளக்கினார்.

இந்த பயிற்சியானது, மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp. புடன் ஒருங்கிணைக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு