Jul 31, 2026
Thisaigal NewsYouTube
25 பேருக்கு குரங்கம்மை இல்லை
தற்போதைய செய்திகள்

25 பேருக்கு குரங்கம்மை இல்லை

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 26-

நாட்டில் 31 பேருக்குக் குரங்கம்மை பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 25 பேருக்குக் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எஞ்சிய அறுவர் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களது மருத்துவச் சோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்று சுகாதார அமைச்சர்டத்தோஸ்ரீ டாக்டர் டுல்கேப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

நாட்டில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை. இதுவரை ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஜுலை 26 ஆம் தேதி முதல் பாதிப்பு பதிவானது. ஆகக்கடைசியான பாதிப்பு அதே ஆண்டு நவம்பரில் பதிவானதாக டாக்டர் டுல்கேப்ளி விளக்கினார்.

Related News