Dec 27, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூரில் அதிகாலையில் கோர விபத்து: 2 இளைஞர்கள் பலி, 4 பேர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் அதிகாலையில் கோர விபத்து: 2 இளைஞர்கள் பலி, 4 பேர் படுகாயம்

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.27-

இன்று அதிகாலை செனாய்–டெசாரு விரைவுச் சாலையில், 3 வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளானதில், இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு, 4 பேர் படுகாயமடைந்தனர்.

காலை 5.37 மணியளவில் தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பாசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த 8 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதன் கமாண்டர் நஸாருடின் யுசோஃப் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்தில், 21 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், 14 வயதுடைய சிறுமி சுயநினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்பு நடவடிக்கையானது அதிகாலை 7.30 மணி வரை நீடித்த நிலையில், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Related News