கோலாலம்பூர், செப்டம்பர்.09-
நேப்பாள அரசுக்கு எதிராக அந்நாட்டு இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் கலவரமாக மாறியத்தை தொடர்ந்து அந்நாட்டில் இருக்கும் மலேசியர்கள் அல்லது அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் விழிப்பாக இருக்கும்படி விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.
நேப்பாள நாட்டின் அதிகாரிகள் வழங்கக்கூடிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், அதிகாரப்பூர்வமான வழிகளில் வழங்கப்படும் தகவல்களைப் பெறவும் மலேசியர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
தலைநகர் காட்மண்டுவில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் எந்தவொரு மலேசியரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெடித்த கலவரத்தினால் காட்மண்டுவில் திரிபுவன் அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.








