Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சதிகாரர்களை நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்
தற்போதைய செய்திகள்

சதிகாரர்களை நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்

Share:

நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிக்கும் எந்தவொரு தனி நபரையும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்ட முடியும் என்று சட்ட வல்லுனர் ஒருவர் தெளிவுப்படுத்துயுள்ளார்.

ஓர் அரசாங்கம் வழி நடத்தப்படும் போது, சட்டத்திற்குப் புறம்பாக கீழறுப்பு செயலில் ஈடுப்பட்டு, அரசாங்க கேந்திரத்தை முடக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குச் சட்டத்தில் இடம் உண்டு என்று மூத்த வழக்கறிஞரும், அரசியலமைப்பு சட்ட நிபுணருமான முகமட் ஹனீஃப் கத்ரி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை விதிக்கவும், சட்டம் வகை செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

Related News