பச்சரிசை ஏற்றுமதியை தடை செய்து இருக்கும் இந்தியாவின் முடிவு தொடர்பாக அந்நாட்டின் பிரதிநிதிகளுடன் விவசாயம் மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிரதிநிதிகளுடன் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக முகமட் சாபு குறிப்பிட்டார். பச்சரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்து இருக்கும் இந்தியாவின் முடிவு மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக முகமட் சாபு தெரிவித்துள்ளார்.
இன்று தெலுக் இந்தானில் உள்ள ஃபெல்க்ரா வின் நெல் உற்பத்தி ஆலைக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் முகமட் சாபு இதனை குறிப்பிட்டுள்ளார்.
பச்சரிசி ஏற்றுமதியை இந்தியா முற்றாக தடை விதிக்குமானால் பொருட்களின் விலை ஏற்றம் காண்பதற்கான அபாயத்தையும் முகமட் சாபு விளக்கியதாக தெரிவித்துள்ளார்.

Related News

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்


