வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தேசியத் தினத்தையொட்டி தங்களின் ஆட்சிக்கு உட்பட்ட 4 மாநிலங்களில் தனிபட்ட சின்னம் மற்றும் கருப்பொருளை வெளியிடப்போவதாக மிரட்டியிருக்கும் பெரிக்காத்தான் நேஷனலின் இளைஞர் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி-யை போலீசார் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கத்தின் தேசிய தின கருப்பொருள் மற்றும் சின்னத்திற்கு எதிராக தங்களின் சொந்த சின்னத்தையும் கருப்பொருளையும் வெளியிடப்போவதாக அஹ்மத் ஃபத்லி அறிவித்திருப்பது அரசாங்கத்திற்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள ஓர் அச்சுறுத்தலாகும் என்று அமானா கட்சியின் செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஃபைஸ் ஃபாதில் தெரிவித்துள்ளார்.
கிளத்தான், திரங்கானு, பெர்லிஸ் மற்றும் கெடா மாநில மக்கள் மத்தியில் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்புணர்ச்சியை தூண்டும் இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படகூடாது என்று முஹம்மது ஃபைஸ் கேட்டுக் கொண்டார்.








