Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு ஆடவர்கள் மீது கொலை குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இரண்டு ஆடவர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர் , ஜூலை 02 -

சக நாட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவரை கொலை செய்ததாக இரு வங்காளதேசப்பிரஜைகள், கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

36 வயது முகமது மிலன் மியா மற்றும் 64 வயது Kader Bacha என்ற அந்த இரண்டு வங்காளதேசப் பிரஜைகள், மாஜிஸ்திரேட் லில்லி மரிஸ்கா கலிசா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, கொலை குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இவ்விரு நபர்களும் கடந்த ஜுன் 17 ஆம் தேதி கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ் , ஜாலான் டிராவர்ஸ் என்ற இடத்தில் அபு சந்திர பார்மன் என்ற நபரை கொலை செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட நபரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்