ஷா ஆலாம், ஆகஸ்ட்.21-
சிலாங்கூர் மாநில போலீஸ் துறை தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து சம்மன்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கியது.
சிலாங்கூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இரண்டு நாள் நிகழ்ச்சியாக காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சிலாங்கூர் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு முகப்பிடங்களில் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து குற்றங்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி பொருந்தும். சம்மன்கள் கட்டணத் தள்ளுபடிக்கு தகுதியற்ற குற்றங்களைக்கு இந்தக் கட்டணக் கழிவு சலுகை பொருந்தாது.
குறிப்பாக விபத்துக்கள், நீதிமன்றம் தொடர்பான வழக்குகள், கூட்டுச் சேர்க்க முடியாத குற்றங்கள், கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள், ஆபத்தான முறையில் முந்திச் செல்வது அல்லது வரிசையை வெட்டுதல், அவசரப் பாதைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், சிவப்பு விளக்குகளைக் கடந்துச் செல்லுதல், இரட்டைக் கோடுகளில் முந்திச் செல்வது மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வெளியேற்றக் குழாய்கள் பொருத்துதல் ஆகியவற்றுக்கு கட்டணக் கழிவு இல்லை என்பதையும் அது தெளிவுபடுத்தியது.








