இவ்வாண்டு ஜனவரி 1 முதல் கடந்த செப்டம்பர் 30 வரை சமூக ஊடகத் தளங்களில் மோசடி உள்ளடக்கம் கொண்ட 3,150 பதிவுகளை தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் முடக்கியுள்ளது.
அவை பேஸ்புக்கில் 2,871, இணையத்தளங்கள் 1,471, வாட்ஸ் அப் 254, இன்ஸ்டாகிராம் 13, தெலிகிராம் 11 மற்றும் டிக்டோக்கில் ஒன்று என தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர்
தியோ நீ சிங் தெரிவித்தார்.
"இதில் எம்.சி.எம்.சி-இல் அதிகாரங்கள் குறைவாக உள்ளன. உதாரணமாக மலேசிய போலிஸ் படையின் கீழ் மோசடி குறித்து விசாரிக்கப்படுகின்றது. இருப்பினும் மோசடி உள்ளடக்கம் இருப்பது உறுதிபடுத்தப்பட்டால், எம்.சி.எம்.சி சம்பந்தப்பட்ட அந்த மோசடி உள்ளடக்கத்தைக் அகற்ற முக்கிய பங்காற்றுகிறது என்று தியோ நீ சிங் குறிப்பிட்டார்.
"மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதை உறுதிச் செய்ய எம்.சி.எம்.சி எப்போதும் மலேசிய போலிஸ் படையுடன் நெருக்கமான ஒத்துழைப்பை வழங்கும்" என்று மக்களவையில் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் எழுப்பிய கேள்விக்கு தியோ இவ்வாறு பதிலளித்தார்.
இணையக் குற்றங்களில் தற்போது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அதன் கடவுச்சொற்களை ஊடுருவது, தகவல் கசிவு, தரவு மீறல்கள், மற்றும் நிதி மோசடி போன்ற ஆபத்துகளால் எடுக்கப்படும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் குறித்த டாக்டர் வான் அசிசா முன்னதாக மக்களவையில் கேள்வி எழுப்பினார்.








