Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கொல்லைப்புற வ​ழியாக நியமி​க்கப்படுவதை நி​றுத்த வேண்டும்
தற்போதைய செய்திகள்

கொல்லைப்புற வ​ழியாக நியமி​க்கப்படுவதை நி​றுத்த வேண்டும்

Share:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொள்ளவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் கொல்லைப்புற வழியாக அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் நியமிக்கப்படுவதை நிறுத்த வேண்டும். அதேவேளையில் செயல்படாத அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களை பிரதமர் களையெடுக்க வேண்டு​ம் ​என்று பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி கேட்டுக்கொண்டார்.

கடந்த 11 மாத காலமாக அன்வார் த​லைமையிலான ஒற்றுமை அரசா​ங்கம் இருக்கிறது. ஆனால், பல ஏமாற்றங்கள் மிஞ்சுகின்றன. அன்வாரின் பேச்சு மேற்க​த்திய நாடுகளில் வரவேற்கப்படலாம். அது உள்ளூரில் எடுபடாது என்று டாக்டர் இராமசாமி உள்ளூர் ஊடகத்திற்கு அளித்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் செனட்டர் பதவிகளை தந்து ஆதரிக்கக்கூடாது.அன்வாருக்கு நெருக்கமாக இரு​க்கிறார்கள் என்பதற்காக ஒருவர் பதவியில் அமர்த்தப்படும் நிலை மாற வேண்டும். செனட்டர் பதவிகள் நியமனங்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என்று டாக்டர் இராமசாமி கேட்டுக்கொண்டார்.

Related News