Oct 18, 2026
Thisaigal NewsYouTube

குற்றச்சாட்டை மறுத்தது சுகாதார அமைச்சு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குற்றச்சாட்டை மறுத்தது சுகாதார அமைச்சு

கோலா சிலாங்கூர், அக்டோபர் 07-

தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், சபா, லஹாட் டத்து அரசு மருத்துமனையில் பணியாற்றி வந்த காலக்கட்டத்தில் பகடிவதையினால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தை விசாரணை செய்வதில் தாங்கள் காலதாமதம் காட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி தாம் தங்கியிருந்த வீட்டில் உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படும் உடல்கூறு மருத்துவ நிபுணரான டாக்டர் டே டியென் யா மரணம் தொடர்பில் கோத்த மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங் கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் குழப்பத்தை ஏற்படுத்துவாக உள்ளது என்றும் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் டுசுல்கேப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

இப்படியொரு சம்பவம் நிகழ்ந்தவுடனே சுகாதார அமைச்சு உள் அளவிலான விசாரணையை முதலில் தொடங்கியதாக அவர் தெளிவுபடுத்தினார். அந்த மருத்துவர் நிபுணர் மரணம் தொடர்பில் உண்மை நிலவரத்தை அறியாமல் ஆருடம் தன்மையிலாக குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →