தம்பின், துன்கு ஷெட் இட்ருஸ் இடைநிலைப் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினரும் ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் சுப்ரமனியம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தீபாவளியை முன்னிட்டு அப்பள்ளியில் பயிலும் பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு அன்பளிப்புகளை எடுத்து வழங்கினார்.
தலைமை உரையாற்றிய வீரப்பன், கல்விதான் நமது முக்கியமான ஆயுதம். அதில் முழு கவனம் செலுத்தினால் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் எனக் கூறினார். புக்கிட் ரோக்கான் உத்தாரா கெமென்சே குடியேற்றவாசியின் மகனான தாம் வாழ்க்கையில் முன்னேற கல்வியே முதன்மையாகக் கைகொடுத்தது எனவும் மாணவர்களிடத்தில் பேசுகயில் குறிப்பிட்டார்.








