Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சுல்தான் இப்ராஹிம், அரசு ஊழியர்கள், ஊழலைத் தவிர்த்து, தங்களின் வசதிகளுக்குள் வாழ வேண்டும் என்று நினைவூட்டினார்
தற்போதைய செய்திகள்

சுல்தான் இப்ராஹிம், அரசு ஊழியர்கள், ஊழலைத் தவிர்த்து, தங்களின் வசதிகளுக்குள் வாழ வேண்டும் என்று நினைவூட்டினார்

Share:

ஜொகூர் மாநிலத்தில் வசிக்கும் அரசாங்க அதிகாரிகள் தங்களின் வாழ்வாதரத்திற்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என ஜொகூர் மாநில சுல்தான் , சுல்தான் இப்ராஹிம் அல்மார்ஹும் சுல்தான் இஸ்கண்டார் கேட்டுக் கொண்டார்.

வருடா வருடம் அரசாங்க அதிகாரிகள் தங்களின் சொத்து கணக்குகளை அரசாங்கத்திடம் காட்டுவதால் அவர்களின் வாழ்வாதரம் மீறிய சொத்துகளை அவர்கள் கொண்டுள்ளனரா என கண்காணிக்க முடியும் என்றும் இதன் வழி அரசாங்க அதிகாரிகள் கையூட்டுகளைப் பெறுவதிலிருந்து தடுக்க முடியும் என சுல்தான் இப்ராஹிம் அல்மார்ஹும் சுல்தான் இஸ்கண்டார் கூறினார்.

அரசாங்கம் , அரசாங்க ஊழியர்களின் செலவுகள், வாழ்விடம், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை போன்ற தகவல்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் சம்பளப் பண அமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில பகிர்ந்துள்ளார்.

Related News