Dec 18, 2025
Thisaigal NewsYouTube
கிள்ளான் தாமான் செந்தோசாவில் கத்திக் குத்துத் தாக்குதலில் 34 வயது ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

கிள்ளான் தாமான் செந்தோசாவில் கத்திக் குத்துத் தாக்குதலில் 34 வயது ஆடவர் மரணம்

Share:

கிள்ளான், டிசம்பர்.18-

நேற்று புதன்கிழமை இரவு, கிள்ளான், தாமான் செந்தோசாவில் நடந்த கத்திக் குத்துத் தாக்குதலில், 34 வயது ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டதை சிலாங்கூர் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த வன்முறைச் சம்பவம் குறித்து, நேற்று இரவு 11.10 மணியளவில், MERS அவசர அழைப்புக்குத் தகவல் கிடைத்தாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தாமான் செந்தோசா பகுதியில் இரு தரப்பினரிடையே நடந்த மோதலின் போது, கத்தியால் தாக்கப்பட்டதில், அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ், இச்சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவுச் செய்துள்ள போலீசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் யாரேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related News