Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தந்தையைப் போல ஜீவா ராக்யாட் சுல்தான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தந்தையைப் போல ஜீவா ராக்யாட் சுல்தான்

பெக்கான், டிச. 16-


மக்களுக்கும், மக்கள் தொடர்புடைய பிரச்னைகளுக்கும் அதீத அக்கறை செலுத்திய தமது தந்தையார் மறைந்த பகாங் சுல்தான், சுல்தான் அகமட் ஷாவைப் போலவே மக்களுடன் மக்களாக இரண்டறக் கலக்கும் ஜீவா ராக்யாட் மாண்பைக்கொண்டுள்ள மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா, தமது கண் எதிரே நிகழ்ந்த விபத்தை பார்த்தப் பின்னர் தமது பயணத்தை தொடராமல், அவ்விடத்திலேயே நின்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்தது பெரும் கவன ஈர்ப்பாக அமைந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பகாங், பெக்கான், இஸ்தானா சாடாஅருகில் ஜாலான் சுல்தான் அகமட் சாலையில் விபத்து நடந்த பகுதியில் தனது வாகனத்தைவிட்டு இறங்கிய சுல்தான் அப்துல்லா, Chevrolet Colorado ரக கார் ஓட்டுநரான 47 வயது சித்தி அயிா ஹுசேன் மற்றும் டிரெய்லர் ஓட்டுநர் 29 வயது முகமட் ஹபிசுல் ஆகியோரை அணுகி விவரத்தை கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு உதவவும் முன் வந்தார்.

அதிர்ஷ்டவசமாக அவ்விருவரும் காயம் அடையவில்லை என்று தெரிந்ததும், தேவைப்படக்கூடிய வேறு உதவிகளையும் சுல்தான் கேட்டறிந்தார். மழை காலமாக இருப்பதால் வாகனமோட்டிகள் மிக கவனமாக வாகனத்தை செலுத்தும்படி பொது மக்களுக்கு சுல்தான் அப்துல்லா ஆலோசனைக் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →