Sep 27, 2026
Thisaigal NewsYouTube
இந்திய வர்த்தர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய வர்த்தர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

Share:

டிஜிட்டல் தொழில் நுட்பமும், AI-செயற்கை நுண்ணறிவும் உலகை வேகமாக ஆக்கிரமித்து வருகின்றன.

இந்த தவிர்க்க முடியாத தேவையைக் கருத்தில் கொண்டு ஹெனிக்கன் மார்கெட்டிங் மலேசியா வசதி குறைந்த 10 இந்திய தொழில் முனைவோருக்கு, டிஜிட்டல் மற்றும் AI செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டு தொடர்பான பயிற்சி வாய்ப்பை வழங்குகிறது.

தனது சமூகப் பொறுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இலவச பயிற்சியை ஹெனிக்கன் வழங்குகிறது.

தொழில் முனைவோரின் வணிகத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் இந்த பயிற்சி வரும் மே மாதம் 4-ஆம் தேதி முதல் 8 தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் நடைபெறும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் அடிப்படைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல், வணிக உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், அடிப்படை டிஜிட்டல் வணிக திறன்களை உருவாக்குதல், சமூக ஊடக தளங்கள் மூலம் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துதல் போன்ற திறன்கள் இந்த பயிற்சியில் வழங்கப்படும்.

சிறு, குறு அல்லது வீட்டை அடிப்படையாகக் கொண்ட வணிகம் புரியும் இந்திய தொழில் முனைவோர் இதில் பங்குபெறலாம். குறைந்த வருமானம் ஈட்டும் தொழில் முனைவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

5 நாட்கள் நடைப்பெறும் இந்தப் பயிற்சி திட்டத்தில் 10 பேருக்கு மட்டுமே முதல்வாய்ப்பு வழங்கப்படுவதால் விரைந்து விண்ணப்பம் செய்யும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த தொழில் நுட்ப பயன்பாடுகளை பற்றிய பயிற்சியை சிறப்பான முறையில் பயின்று தனது வர்த்தக வாய்ப்பினை பெறுக்கிக் கொள்ளும் 3 பங்கேற்பாளர்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்படும்.

10 இடங்கள் மட்டுமே உள்ளதால், ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க இறுதி நாளான வரும் 22-ஆம் தேதி ஏப்ரல் மாதத்திற்குள் 017-207 7527 என்ற தொலைபேசி வாட்ஸ்ஆப் புலனத்தின் வழி உங்கள் விபரத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

சுலபமான வைகையில், உங்கள் பெயர், வயது, வியாபார நிறுவனத்தின் பெயர், தொழில் விவரம் ஆகியவாற்றை மட்டுமே பதிவு செய்தால் போதுமானது.

இது டைகர் மலேசியா-மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கும் சமூக மேம்பாட்டு முயற்சியாகும். இந்திய தொழில் முனைவோர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்தி பலன் பெறும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்