Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கைப்பேசியைத் திருடிய பெண்மணி தேடப்படுகிறார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கைப்பேசியைத் திருடிய பெண்மணி தேடப்படுகிறார்

காஜாங், ஜூன்.29-

காஜாங்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருந்து கைப்பேசியைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்மணியைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, முகப்பு கவுண்டரில் வைத்திருந்த தனது ஹுவாவேய் நோவா 5G வகை கைப்பேசி திருடப்பட்டதாக, 20 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். கண்காணிப்பு கேமரா காட்சிகளில், அப்பெண் கைப்பேசியை எடுப்பது பதிவாகியுள்ளதாக காஜாங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →