இந்நாட்டில் குத்தகை அடிப்படையில் அரசாங்க மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்ற ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னை, அடுத்த ஆண்டில், இரண்டாவது காலாண்டில் தீர்க்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்டஃபா உறுதி அளித்துள்ளார்.
ஒப்பந்த மருத்துவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை கவனிப்பதற்கும், அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கும் இவ்வாண்டு மார்ச் மாதம் உயர் மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதையும் அமைச்சர் டாக்டர் சலிஹா சுட்டிக்காட்டினார்.
இதில் அமைச்சின் அதிகாரிகள் உட்பட ஒப்பந்த மருத்துவர்களின் நலன் சார்ந்த பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர். தவி,ர இந்த உயர் மட்டக்குழுவில் மலேசிய மருத்துவர் சங்கத்தின் பொறுப்பாளர்களும் இடம் பெற்று இருப்பதாக மலேசிய கினிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் டாக்டர் சலிஹா இதனை தெரிவித்தார்.








