Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்க சுற்றுப்பயணியின் பெயர் மலேசியா
தற்போதைய செய்திகள்

அமெரிக்க சுற்றுப்பயணியின் பெயர் மலேசியா

Share:

கோலாலம்பூர், ஜூலை 06 -

மலேசியா என்ற பெயரைக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவர் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்த அமெரிக்கப் பெண் தற்போது பலரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இதற்கு முக்கிய காரணம். அவரின் மலேசியா என்பதாகும்.

சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்ட அந்தப் பெண்ணின் காணொளியைக் கண்ட இணையவாசிகளுக்கு அது வேடிக்கையாக இருந்தது.

காணொளியில் அந்தப் பெண் தமது பெயர் "மலேசியா" என்பதால் மலேசியாவுக்கு வந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவுக்கு தாம் மேற்கொண்ட முதலாவது பயணம் இதுவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“இதுவரை மலேசியாவில் எனது அனுபவம் சிறப்பாக அமைந்துள்ளது. மலேசியா மிகவும் அழகாக உள்ளது. மலேசிய மக்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள். இங்குள்ள உணவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றார் அவர்.

எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி கோலாலம்பூருக்கு வந்துள்ள அந்த அமெரிக்கப் பெண், மலேசியா தம்மைப் பெரிதும் கவர்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்