Oct 25, 2025
Thisaigal NewsYouTube
மோசடி: 6 பெண்கள் உட்பட 12 பேர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மோசடி: 6 பெண்கள் உட்பட 12 பேர் மீது குற்றச்சாட்டு

Share:

ஈப்போ, அக்டோபர்.24-

ஸ்கேம் மோசடியில் ஈடுபட்டதாக 6 பெண்கள் உட்பட 12 பேர், ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர். இல்லாத கடன் திட்டம் இருப்பது போல் மக்களுக்கு கடன் தரும் சேவையை வழங்குவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்டதாக 12 பேர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

22 வயது K. லோகரூபன், 22 வயது M. Sayindeep, 22 வயது Muhammad Islandar Ibrahim, 28 வயது Mohamad Yunus Shahril, 19 வயது Salman Al Farisi, 23 வயது Khairul Akbar, 28 வயது Nur Hasmirah Halim, 19 வயது Nurain Ariesya Abdullah, 22 வயது Nur Sofea Zara Muhammad Khairuddin Kasau, 24 வயது Nurul Ain' Aishah Azman, 21 வயது Enjeley Anak Juen மற்றும் 19 வயது K. Yogarani ஆகிய 12 பேர் மீது மோசடி குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

மாஜிஸ்திரேட் Noor Azreen Liyana Mohd Darus முன்னிலையில் நிறுத்தப்பட்ட 12 பேரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

கடந்த அக்டோர் 17ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் ஈப்போ மாவட்டத்திற்கு உட்பட்ட Taman Pengkalan Tiara 6- வில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 417 ஆவது பிரிவின் கீழ் 12 பேரும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

அனைவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 19 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் Noor Azreen தெரிவித்தார்.

அது வரை தலா ஒரு நபர் உத்தரவாதத்துடன் மூவாயிரம் ரிங்கிட் ஜாமீனில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related News