Jun 30, 2026
Thisaigal NewsYouTube
போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்ச்சி: 33 வழக்குகள் பதிவு
தற்போதைய செய்திகள்

போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்ச்சி: 33 வழக்குகள் பதிவு

Share:

மலேசியாவில் போலி மருத்துவ சான்றிதழ்கள் விற்பனையானது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பிரச்சினையாக உள்ளதாக புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு மார்ச் 23-ஆம் தேதி வரை மொத்தம் 33 போலி ஆவண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையான CCID-யின் பதிவுகளின் படி, அதே காலகட்டத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டதுடன், 10 வழக்குகள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

முதலாளிகள் அளித்த போலீஸ் புகார்களின் அடிப்படையில், இவ்வகை செயல்பாடுகள், கண்டறியப்பட்டதாக அதன் CCID இயக்குநர் டத்தோ ருஷ்டி முகமது ஈசா தெரிவித்துள்ளார்.

பெறப்படும் ஒவ்வொரு தகவலும் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், ஒழுங்குபடுத்தப்பட்ட குழுக்கள் செயல்படுகிறதா என்பதை கண்டறியவும் முழுமையாக விசாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News