ஷா ஆலாம், பிப்ரவரி.06-
மற்றவர்களின் நற்செயல்களைக் கூட 'ஹராம்' என்று கூறி தடை செய்யப்பட்டது என்று கருதும் பாஸ் கட்சித் தலைவர்களின் போக்கை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கடுமையாகச் சாடியுள்ளார்.
பாஸ் கட்சியினர் எதைச் செய்தாலும் அது நல்லது என்றும், ஏற்றுக் கொள்ளத்தக்கது என்றும் கருதப்படுவதாக ங்கா கோர் மிங் கூறினார்.
பாஸ் கட்சியின் பழக்கத்தைப் பின்பற்றாதீர்கள். அவர்கள் எதைச் செய்தாலும் அது 'ஹலால்'. ஆனால், மற்றவர்கள் நல்ல விஷயங்களைச் செய்தாலும் அது 'ஹராம்' என்று கருதப்படுகிறது.
மலேசியா போன்ற பல்லின சமூகத்தில், பரஸ்பர மரியாதை மிக முக்கியமானது. தோல் நிறம் அல்லது மத நம்பிக்கைகளின் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்படக் கூடாது என்று ங்கா கோர் மிங் இன்று வெள்ளிக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.








