Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூர் மாநிலத்தில் மீண்டும் சனி, ஞாயிறு வார விடுமுறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூர் மாநிலத்தில் மீண்டும் சனி, ஞாயிறு வார விடுமுறை

ஜொகூர் , அக்டோபர் 07-

ஜோகூர் மாநிலத்தில் வார விடுமுறையாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் அமலாக்கம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக ஜோகூர் மந்திரி பெசார் Datuk ஒன் ஹபீஸ் காஜி அறிவித்துள்ளார்.

சனி, ஞாயிறு விடுமறையில் அரசாங்கம் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 19 லட்சத்து 4 ஆயிரத்து 800 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர் மாநிலத்தில் தற்போது வார விடுமறை, வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு விடுமுறையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு அங்கீகரித்துள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக மந்திரி பெசார் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →