Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்கான காலக்கெடு மார்ச் 31
தற்போதைய செய்திகள்

அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்கான காலக்கெடு மார்ச் 31

Share:

ஷா அலாம்,ஜன.9
சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை, சட்டப்பூர்வத் தொழிலாளர்களாக பதிவு செய்து கொள்வதற்கு உள்துறை அமைச்சும், மலேசிய குடிநுழைவுத்துறையும் தொடங்கிய இரண்டாவது மறு கட்டமைப்பு பதிவுத் திட்டமான RTK 2.0, அனைத்து துறைகளை சேர்ந்த தொழிலாளர்களுக்கு கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவுபெற்றுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சட்டவிரோதத் தொழிலாளர்களை பதிவு செய்து கொண்டுள்ள முதலாளிமார்கள், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் சட்டபூர்வத் தொழிலாளர்கள் என்பதற்கான ஸ்டிக்கர்களை பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, தங்கள் பதிவை சரிபார்த்துக்கொள்வதற்கும் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறும் முதலாளிமார்கள் மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவர்களுக்கு எந்த தயவு தாட்சனையும், சலுகையும் காட்டப்படாது என்று அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்