Feb 15, 2026
Thisaigal NewsYouTube
புளூம்பெர்க் நிறுவனத்திற்கு 14 நாட்கள் அவகாசம்: ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அஸாம் பாக்கி எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

புளூம்பெர்க் நிறுவனத்திற்கு 14 நாட்கள் அவகாசம்: ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அஸாம் பாக்கி எச்சரிக்கை

Share:

டெங்கில், பிப்ரவரி.15-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி, தம்மீது அவதூறு பரப்பும் வகையில் கட்டுரை வெளியிட்ட அனைத்துலக ஊடகமான புளூம்பெர்க் நிறுவனத்திற்கு 14 நாட்கள் அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த காலக்கெடுவிற்குள் உரிய விளக்கம் அளிக்கத் தவறினால், 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அவதூறுகளைப் பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எவ்வித அச்சமுமின்றித் தனது கடமைகளைத் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News