கோலாலம்பூர், ஜனவரி.11-
காஜாங்கிலிருந்து பூச்சோங் நோக்கிச் சென்ற லாரியின் பின் சக்கரம் திடீரென வெடித்துத் தெறித்து, ஒரு மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்தது. எதிர்பாராத விதமாக, மேலிருந்து விழுந்த அந்த ராட்சத டயர், கீழே சென்றுகொண்டிருந்த Proton Satria Neo காரின் பின்புறக் கூரையில் பலமாக மோதி நிலை குலைந்தது.
அதிர்ஷ்டவசமாக, 20 வயது மதிக்கத்தக்க கார் ஓட்டுநரும் லாரி ஓட்டுநரும் எவ்வித காயங்களுமின்றி இந்த விபத்திலிருந்து உயிர் தப்பினர். கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்திய பிரிவின் கீழ் காவற்படையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் அளிக்க முன்வருமாறு செப்பாங் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் நோர்ஹிஸாம் பஹாமான் கேட்டுக் கொண்டுள்ளார்.








