குளுவாங், அக்டோபர்.31-
ஜோகூர் சிம்பாங் ரெங்காம் மற்றும் குவாங் ஆகிய பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நேற்று வியாழக்கிழமை வரை நடைபெற்ற போதைப் பொருள் துடைத்தொழிப்பு நடவடிக்கையில் Metamphetamine உட்பட பல்வேறு அபாயகர போதைப் பொருளை உட்கொண்டவர்கள் என்று உறுதிச் செய்யப்பட்ட பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
23 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த பத்து பேரிடமும் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப் பொருள் உட்கொண்டு இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.
மூன்று நாள் நடத்தப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையில் 93 வாகனங்களில் இருந்த 101 பேர் பரிசோதனை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








