Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மூன்று கார்கள் விபத்துள்ளான சம்பவ குறித்து போலீசார் விசாரனை
தற்போதைய செய்திகள்

மூன்று கார்கள் விபத்துள்ளான சம்பவ குறித்து போலீசார் விசாரனை

Share:

ஜாலான் பெர்னாம், பத்து 3,ஜாலான் கிள்ளான்-தெலுக் இந்தான்,53 ஆவது கிலோமீட்டரில் மூன்று வாகனங்கள் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை குறித்து சாட்சியாளரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

23 வயதுடைய நொர்ஷாம் நசுல்லா ரஹிம் இந்த கோர விபத்தில் மாண்டதாக தெரியவந்துள்ளது. பெரோடுவா பேசா ரக வாகனத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரை வெளியேற்ற உதவிய ஓர் ஆடவன்தான் இவ்விபத்திற்கு சாட்சியாக அமைந்ததாக குவாலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் ரம்லி காசா தெரிவித்தார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட நபரை குறித்து போதுமான விவரங்கள் இல்லாததால் இதுக்குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு ரம்லி காசா கேட்டு கொண்டார்.

Related News