May 22, 2026
Thisaigal NewsYouTube
வீட்டின் அறையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

வீட்டின் அறையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது

Share:

சிலாங்கூர், புத்ரா பெர்டானா - வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் அறையில் பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இன்று மதியம் 2.03 மணியளவில் தமது தரப்புக்கு அவசர அழைப்பு கிடைக்க பெற்றதாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செயல்பாட்டு பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட வீட்டை வந்தடைந்த போது, வீடு பூட்டி இருந்ததாகவும் சிறப்பு சாதனங்களை பயன்படுத்தி பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது, சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் கண்டறியப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

மேல் நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தகவலளித்தார்.

Related News