குவாந்தான், செப்டம்பர்.09-
பகாங் மாநிலச் சுற்றுலாத் தளங்களை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் அதனை விளம்பரப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அம்மாநில அரசு.
இதற்காக இம்மாதம் செப்டம்பர் 24-ம் தேதி புதுடெல்லியிலும், செப்டம்பர் 26-ம் தேதி சென்னையிலும் Promotional Roadshow-களை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது.
இதன் மூலம், பகாங்கின் முக்கிய சுற்றுலாத் தளங்களான ஃபிரேசர் ஹில், கெந்திங் ஹைலண்ட்ஸ், கேமரன் ஹைலண்ட்ஸ் மற்றும் தியோமான் தீவு ஆகியவற்றிற்கு இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.








