கோலாலம்பூர், ஜனவரி.06-
தனது வீட்டில் வழுக்கி விழுந்து, தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவிற்கு வலது பக்க இடுப்பு எலும்பு முறிந்திருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து பல வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துன் மகாதீரின் உடல் நிலை சீராக இருந்து வருவதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கவனித்து வருவதாகவும் அவரது பத்திரிகை செயலாளர் சுஃபி யுசோஃப் தெரிவித்துள்ளார்.
துன் மகாதீரின் புதல்வி டத்தின் படுகா மரினா மகாதீர் கூறுகையில், தனது தந்தைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு கவனிக்கப்பட வேண்டிய தீவிரமானது என்றாலும், உயிருக்கு ஆபத்து இல்லை என்றார்.
தனது தந்தையின் வயதுடன் ஒப்பிடுகையில் அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.








