செர்டாங், ஜனவரி.18-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் தனது வழக்கமான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டார். இந்த மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் பிரதமரின் ஆரோக்கியம் மிகவும் திருப்திகரமாகவும், உற்சாகமூட்டும் நிலையிலும் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. தனது உடல்நலனில் எவ்வித பாதிப்பும் இல்லாததால், அவர் திட்டமிட்டபடி தனது அனைத்து அதிகாரப்பூர்வ பணிகளையும் தடையின்றித் தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்குத் தலைமை தாங்குவதற்கும் மக்களுக்கு வழங்கிய வாக்கை நிறைவேற்றுவதற்கும் தேவையான உடல் வலிமையை உறுதிச் செய்யவே அவர் இந்தப் பரிசோதனையைச் செய்து கொண்டார். ஒரு தலைவராகத் தனது கடமைகளை முழு அர்ப்பணிப்புடன் செய்வதற்கு உடல் நலனைப் பேணுவதில் அவர் கொண்டுள்ள அக்கறையை இது பிரதிபலிக்கிறது. இந்த முக்கியத் தகவலை சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையின் இயக்குநர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.








