புத்ராஜெயா, நவம்பர்.03-
முதுகு வலியினால் அவதியுற்று வந்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சிகிச்சைக்குப் பின்னர் தற்போது குணமடைந்து வருகிறார். இதனைப் பிரதமர், தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.
தாம் நலமடைய பிரார்த்தனை செய்த மக்களுக்கு பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
முதுகு வலி காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பகாங் மாநிலத்தில் கலந்து கொள்ள வேண்டிய அதிகாரத்துவ நிகழ்ச்சிகளைப் பிரதமர் ரத்து செய்தார்.








