Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பொய்யான தகவல், ஹம்சா ஸைனுதீன் மகன் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பொய்யான தகவல், ஹம்சா ஸைனுதீன் மகன் மீது குற்றச்சாட்டு

Share:

முன்னாள் உள்துறை அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுதீனின் மகன், சமையல் எண்ணெய் உதவித் தொகை தொடர்பில் பொய்யான தகவல் வழங்கியதாக சிரம்பான் செஷன்ஸ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளரான ஹம்ஸா ஸைனுதீனின் 39 வயது மகன் ஃபைசால் ஹலீம், ரிம்பா மெர்பாதி எஸ்.டி.என். பி.எச்.டி என்ற நிறுவனத்தின் இயக்குநர் 55 வயதான அஸிஸுல் அப்துல் ஹலிமுடன் இணைந்து உள்ளூர் வியாபாரிகளிடம் சமையல் எண்ணெய் விற்பனை தொடர்பில் பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்து மோசடி புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிம்பா மெர்பாதி எஸ்.டி.என். பி.எச்.டி நிறுவனம் என்பது சமையல் எண்ணெய்யை விநியோகிக்கம் மொத்த வியாபார லைசென்ஸைப் பெற்றுள்ள நிறுவனமாகும். முன்னாள் அமைச்சரின் மகனான ஃபைசால் ஹலீம் மீது இரு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 20 லட்சம் வெள்ளி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் 1961 ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் ஃபைசால் ஹலீம் இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்