Sep 27, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்தில் போதைப் பொருள் கடத்தல் - 3 மலேசியர்கள் கைது
தற்போதைய செய்திகள்

தாய்லாந்தில் போதைப் பொருள் கடத்தல் - 3 மலேசியர்கள் கைது

Share:

தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள கோன் கென் மாநிலத்தில், 97 கிலோ கிராம் அளவிலான கிறிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், மூன்று மலேசிய ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து அந்நாட்டு மத்திய விசாரணைப் பிரிவான CIB நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், நோங் காய் பகுதியில் இருந்து பாங்காக்கில் உள்ள க்ருங் தேப் அபிவாட் மத்திய நிலையத்திற்குச் செல்லும் ரயிலில், உரிமையாளர் இல்லாமல் இருந்த மூன்று சூட்கேஸ்களில் இந்த போதைப் பொருட்கள் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தவும், ரயில் சேவைகளில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும் தாய்லாந்து ரயில்வே அதிகாரிகளும் நெடுஞ்சாலை போலீசாரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக CIB தெரிவித்துள்ளது.

Related News

தாய்லாந்தில் போதைப் பொருள் கடத்தல் - 3 மலேசியர்கள் கைது | Thisaigal News