ஜோகூர் பாரு, ஜூலை.13-
நேற்றிரவு ஜோகூர், ஜாலான் பாஸார் காராட் பகுதியில் நடந்த இரு மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆற்றில் விழுந்து கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டதாக அஞ்சப்பட்ட நிலையில், அவ்வாறு யாரும் மரணிக்கவில்லை என ஜோகூர் தீயணைப்பு - மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஜோகூர் பாரு மாநகராட்சி மன்றம், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், விபத்தின் தாக்கத்தால் ஒருவர் மட்டுமே தூக்கி எறியப்பட்டார், ஆனால் ஆற்றில் விழவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
அந்த நபர் உட்பட, விபத்தில் பாதிக்கப்பட்ட மூவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். முதலில் ஆற்றில் ஒருவர் விழுந்திருக்கலாம் என்ற தகவலின் பேரில் 30 மீட்டர் தூரத்திற்கும் 12 அடி ஆழத்திலும் மூன்று முறை மூழ்கித் தேடும் பணி நடத்தப்பட்டது. ஆனால் யாரும் கண்டெடுக்கப்படாததால் அதிகாலை 1:14 மணிக்கு தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.








