Mar 25, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய மாணவர்களை மீட்கும் பணியில் மலேசியா அரசாங்கம்
தற்போதைய செய்திகள்

மலேசிய மாணவர்களை மீட்கும் பணியில் மலேசியா அரசாங்கம்

Share:

வங்காளதேசம்,ஜூலை 21-

வங்காளதேசத்தில் நடந்து வரும் எதிர்ப்பு போராட்டத்தின் நிலவரம் மோசமான நிலையில் இருப்பதால், கலவரம் நடந்து வரும் பகுதில் கல்வி கற்றும் வரும் மலேசிய மாணவர்களின் பாதுகாப்பு கருதி Dhakaவில் அமைந்துள்ள மலேசிய தூதரகத்திற்கு மாற்றம் செய்துள்ளதாக புத்ராஜெயா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வங்காளதேசத்தில் நடந்து வரும் எதிர்ப்பு போராட்டதால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் பதற்ற நிலையில் உள்ளார்கள் எனவும் தேவைப்பட்டால் வங்காளதேசத்தில் உள்ள மலேசிய மாணவர்களை மலேசியாவிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விஸ்மா புத்ரா செய்தி வெளியிட்டுள்ளது.

வங்காதேசத்தில் பயின்று வரும் மாணவர்கள் உடனே தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் மலேசிய உயர்கல்விக் அமைச்சு வங்காளதேசத்தின் நிலவரத்தை அவப்போது கண்காணித்து வருவதாகவும் விஸ்மா புத்ரா கூறியது.

Related News