Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கோல சிலாங்கூர் டி.ஆர் கேங் உறுப்பினர்கள் நால்வர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

கோல சிலாங்கூர் டி.ஆர் கேங் உறுப்பினர்கள் நால்வர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

கோல சிலாங்கூர், அக்டோபர்.03-

டி.ஆர் கேங் என்ற திட்டமிட்ட குண்டர் கும்பலின் நான்கு உறுப்பினர்களுக்கு எதிராக மீது இன்று கோல சிலாங்கூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

45 வயது எஸ்.சுகுமாறன், 27 வயது எஸ்.ராஜா, 44 வயது எம்.தேவ குமரன் மற்றும் 35 வயது முகிலன் ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நால்வராவர்.

நால்வருக்கும் எதிராக நீதிபதி நூருல் மர்தியா முகமது ரெட்சா முன்னிலையில் குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்டன. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அவர்களிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்படவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி வரை கோல சிலாங்கூர், ஜெராம், சுங்கை ஜங்குட்டில் உள்ள ஒரு கடல் உணவகத்தில் "கேங் டிஆர்" என்ற திட்டமிட்ட குண்டர் கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணையை கிள்ளான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு துணை அரசு வழக்கறிஞர்கள் ஷபிக் ஹாசிம் மற்றும் லினா ஹனினி இஸ்மாயில் ஆகியோர் நீதிபதியிடம் கோரினர்.

நீதிமன்றம் அரசு தரப்பின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்