கோல கங்சார், ஜனவரி.25-
பேராக், மனோங் பகுதியில் உள்ள கம்போங் பத்து 40 லெம்பூர் என்ற இடத்தில் நேற்று நிகழ்ந்த நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் வேன் ஓட்டுநர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.
இன்று மாலை 3.16 மணியளவில் கோல கங்சார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு இந்த விபத்து குறித்த அவசர அழைப்பு கிடைத்ததாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் 32 வயது ஓட்டுநர் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நான்கு வாகனங்கள் மோதிக் கொண்ட அந்த விபத்தில், அவர் ஓட்டி வந்த நிசான் வேனெட் (Nissan Vannette) ரக வேன் தீப்பிடித்துக் கொண்டதால் வாகனத்திலிருந்து வெளியேற முடியாமல் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உடல் கருகி மாண்டார்.
வேனில் பயணித்த 16 வயது சிறுவனும், 19 வயது பெண்ணும் பொதுமக்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று அப்பேச்சாளர் தெரிவித்தார்.








