Sep 27, 2026
Thisaigal NewsYouTube
300 மில்லியன் ரிங்கிட் ஊழல்: 240 மில்லியன் ரிங்கிட் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனையை கண்டறிந்தது எஸ்பிஆர்எம்
தற்போதைய செய்திகள்

300 மில்லியன் ரிங்கிட் ஊழல்: 240 மில்லியன் ரிங்கிட் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனையை கண்டறிந்தது எஸ்பிஆர்எம்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், 300 மில்லியன் ரிங்கிட் பங்குச் சந்தை ஊழல் தொடர்பான விசாரணையில், சுமார் 240 மில்லியன் ரிங்கிட் வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதை உறுதிச் செய்துள்ளது.

அரசு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, விதிகளுக்குப் புறம்பாகப் பங்கு விற்பனை நடைமுறைகளைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

ஊழல் பணத்தை மறைக்க சிங்கப்பூர், லபுவான் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசில் உள்ள வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சிங்கப்பூரில் மட்டும் 48 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஊழல் தொடர்பில் இதுவரை மொத்தம் 16.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வங்கிக் கணக்குகளை எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

Related News