Sep 29, 2026
Thisaigal NewsYouTube
ஜகார்த்தாவில் 5 மலேசியர்கள் கைது; போதைப்பொருள் கும்பலைப் போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

ஜகார்த்தாவில் 5 மலேசியர்கள் கைது; போதைப்பொருள் கும்பலைப் போலீஸ் தேடுகிறது

Share:

ஜகார்த்தாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து மலேசியர்களை ஆட்சேர்ப்பு செய்ததாக நம்பப்படும் போதைப்பொருள் கும்பலின் தொடர்புகளை மலேசியப் போலீஸ் தேடி வருகிறது.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசேன் ஓமார் கான் கூறுகையில், இந்த ஐந்து மலேசியர்கள் தொடர்பான தகவல்களை இந்தோனேசியப் போலீஸாரிடமிருந்து மலேசியப் போலீஸ் பெற்றுள்ளது.

21 முதல் 30 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும், கடந்த 25-ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து ஜகார்த்தா சென்ற விமானம் மூலம் அங்குள்ள Soekarno-Hatta அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்தபோது கைது செய்யப்பட்டனர்.

சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஒவ்வொருவரிடமும் தலா 500 கிராம் எடையுள்ள எட்டோமிடேட் என சந்தேகிக்கப்படும் இரண்டு பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் சரவாக்கையும் இருவர் பகாங்கையும் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவருக்கு போதைப்பொருள் தொடர்பான மூன்று குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

Related News