ஜோகூர், செனாய் விமான நிலையம், அனைத்துலக வழித்தடங்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு வழித்தடங்களுக்கான முதலாவது ஏர் ஆசியா விமானம், சீனா, குவாங்சூவிலிருந்து செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று காலை 6.55 மணியளவில் தரையிறங்கியது.
அந்த விமான நிலையத்தை நிர்வகித்து வரும் செனாய் ஏர்போர்ட் டெர்மினல் சர்வீஸ் நிறுவனம், பயணிகளுக்கு உற்காசம் மிகுந்த மகத்தான வரவேற்பபை நல்கியது.
ஜோகூர் மாநில அரசு சார்பில் அதன் ஆட்சிக்குழு உறுப்பினர் கே. ரவின் குமார் மற்றும் மாநில சுற்றுலா வாரியத்தின் பிரதிநிதிகள், பயணிகளை இன்முகத்துடன் வரவேற்றனர்.
சீனா,குவாங்சூவிலிருந்து ஜோகூர் பாருவிற்கான இந்த வழிநில்லா பயணத்தில், எ.கே 1395 என்ற விமானம் 110 பயணிகளுடன் செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியதாக விமான நிலைய தலைமை செயல்முறை அதிகாரி கென்னடி ஆயு தெரிவித்துள்ளார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


