சுங்கை பூலோ, ஜூலை.13-
கடந்த வியாழக்கிழமை புஞ்சாக் ஆலாம், எல்பிஎஸ் ஆலாம் பெர்டானாவில் வீட்டிலிருந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 13 வயது சிறுமி நேற்று பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ஹஃபிஸ் முகமட் நோர் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் உதவி செய்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.








